The Nature of Life: வாழ்க்கையின் இயல்பு
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க! சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க! நீரில் மிதந்திடும் கண்களும் காய்க! நிம்மதி, நிம்மதி இவ்விடம் சூழ்க! Long live the person gone after completed his life Long live the person came with disturbed thoughts Let the moist eyes dry up Let peace, peace, circulate here ஜனனமும் பூமியில் புதியது இல்லை, மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை, இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை, இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை! Birth is nothing new on this earth There is nothing as old as death Nature is not here without them both Nature’s order is wisdom’s border பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே! Where are the affectionate eyes? Where are the searching hands? Where are the feet that measured the nation? Where are the ashes left by that devouring fire? கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக, மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க, எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக, எச்சங்களால் அந...